தண்டவாள பராமரிப்பு பணி: பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்து மாற்றம்

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் தண்டவாள பராமரிப்பு பணிக்காக தென்மாவட்ட பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தண்டவாள பராமரிப்பு பணி: பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்து மாற்றம்
Published on

மதுரை,

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு கோவை புறப்படும் பாசஞ்சர் ரெயில் இன்று(சனிக்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை திருப்பரங்குன்றம் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.

மறுமார்க்கத்தில் மறுமார்க்கத்தில் கோவை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.20 மணிக்கு நாகர்கோவில் புறப்படும் பாசஞ்சர் ரெயில் மேற்கண்ட நாட்களில் திண்டுக்கல் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். இந்த ரெயில்கள் வருகிற 21-ந் தேதி மற்றும் 28-ந் தேதிகளில் வழக்கம் போல இயக்கப்படும்.

செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு மதுரை புறப்படும் பாசஞ்சர் ரெயில் இன்று முதல் வருகிற 30-ந் தேதி வரை விருதுநகருடன் நிறுத்தப்படும்.

மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து மாலை 5 மணிக்கு செங்கோட்டை புறப்படும் பாசஞ்சர் ரெயில் இன்று முதல் வருகிற 30-ந் தேதி வரை மதுரையில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக விருதுநகர் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரெயில் கள் வருகிற 21-ந் தேதி மற்றும் 28-ந் தேதிகளில் மட்டும் வழக்கம் போல இயக்கப்படும்.

ராமேசுவரம்-புவனேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 24-ந் தேதி மட்டும் திருச்சி ரெயில் நிலையத்துக்கு வழக்கமான நேரத்தை விட தாமதமாக சென்றடையும்.

சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.16127) வள்ளியூர், நாகர்கோவில் ரெயில் நிலையங்களுக்கு இன்று முதல் வருகிற 30-ந் தேதி வரை சுமார் 2 மணி நேரம் தாமதமாக சென்றடையும். இதையடுத்து, சென்னை-தூத்துக்குடி இணைப்பு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.16129) மேற்கண்ட நாட்களில் இரவு 10 மணிக்கு தூத்துக்குடி ரெயில் நிலையம் சென்றடையும். இந்த ரெயில்கள் வருகிற 21-ந் தேதி மற்றும் 28-ந் தேதிகளில் மட்டும் வழக்கமான நேரத்துக்கு இயக்கப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com