கோவை,
கேரளாவில்தென்மேற்கு பருவமழை தீவிரம்அடைந்து உள்ளது.இதனை தொ டர்ந்துகோவை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை தொடங்கிய மழை 4-வது நாளாக நீடித்தது. நேற்று முன்தினம் முதல் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. ரெயில்நிலையத்தை சுற்றிலும்மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கோவை ரெயில்நிலையத்திற்கு பின்புறம்ரெயில்வே பார்சல்அலுவலகம் உள்ளது.இருசக்கரவாகனங்களை பார்சல்செய்து வெளியூர்களுக்கு அனுப்பும் இடம் மற்றும் பொருட்கள் வைக்கும் இடம் ஆகியவை செயல்பட்டு வந்தது. 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டஇந்த கட்டிடம்ரெயில்வேக்கு சொந்தமானதாகும்.
ஈரோட்டை சேர்ந்தபார்சல்கிளார்க் ரகு(வயது 30),கிளார்க் அறைஉதவியாளர்காரமடையை சேர்ந்தபவளம் மணி (50),மேட்டுப்பாளையத்தை சேர்ந்தசுமை தூக்கும்தொழிலாளி இப்ராகிம் (55) மற்றும் பீகார்மாநிலத்தை சேர்ந்ததற்போது கோவை இடையர்பாளையத்தில் வசித்து வரும் ராஜூ (20) ஆகிய 4பேர் பணியில்இருந்தனர். பலத்த காற்று மற்றும்மழை காரணமாகநேற்று அதிகாலை 3.30மணியளவில்பார்சல் அலுவலகத்தின் 15 அடி உயரம்உள்ள பக்கவாட்டுசுவர்திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் பவளம் மணி, இப்ராகிம், ராஜூ ஆகியோர் இடிபாடுகளுக்குள்சிக்கி கொண்டனர்.
இந்த கட்டிடம்இடிந்து விழுந்தபோது அந்த வழியாக ஏராளமான பயணிகள் சென்று கொண்டிருந்தனர். கட்டிடம் இடிந்து விழுந்த சத்தம் கேட்டதும் அவர்கள் அலறி அடித்து ஓடினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த ரெயில்வே ஊழியர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள், பயணிகள் ஆகியோர் விரைந்து சென்று பார்த்தனர். கட்டிடம் விழுந்து கிடந்ததையும், அதில் 3 பேர் சிக்கிஉயிருக்கு போராடி கொண்டு இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்துதீயணைப்பு துறைமற்றும்ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல்தெரிவித்தனர்.மாவட்ட தீயணைப்பு துறைஅதிகாரி பாலசுப்பிரமணியம்தலைமையில் 5 தீயணைப்பு வாகனங்களில் 50-க்கும்மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்தனர்.ரெயில்வே பாதுகாப்பு படையினரும்20 பேர் விரைந்து வந்தனர்.
ரெயில்நிலைய பயணிகள்,ரெயில்வே போலீசார்மற்றும் பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கிய பவளம் மணி, இப்ராகிம், ராஜூ ஆகியோரைமீட்டு கோவைஅரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முழுவதும் இடிந்து கிடந்ததால் கட்டிங் எந்திரம் மூலம்இரும்பு கம்பிகள்அறுக்கப்பட்டு இடிபாடுகள் அகற்றப்பட்டன.
பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட பவளம் மணி, இப்ராகிம்ஆகியோர் சிகிச்சை பலனின்றிஇறந்தனர்.ராஜூக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்தீவிர சிகிச்சைபிரிவில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.
மீட்பு பணிநடைபெற்ற போது பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் தீயணைப்பு வீரர்கள்,ரெயில்வே பாதுகாப்பு படையினர், ஆட்டோ டிரைவர்கள், ரெயில் பயணிகள்மீட்பு பணியில்ஈடுபட்டனர்.
ரெயில்வே பார்சல்அலுவலக கிளார்க்ரகுபக்கத்துஅறையில் இருந்ததால் காயம் இன்றிஉயிர் தப்பினார். இடிபாடுகளுக்குள் மேலும் யாரும் சிக்கி உள்ளார்களா?என தீயணைப்புவீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் வேறு யாரும் சிக்கவில்லைஎன்பது தெரிய வந்தது. சுவர் இடிந்து விழுந்த ரெயில்வே பார்சல்அலுவலகத்தை அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். கட்டிடம் இடிந்து விழுந்ததால் பார்சல் அலுவலகத்தில் இருந்த பொருட்களும் சேதம் அடைந்தன. அவை அப்புறப்படுத்தப்பட்டன.
பலியான 2 தொழிலாளர்களின்குடும்பத்தினரை கோவை தெற்கு தொகுதிஎம்.எல்.ஏ. அம்மன் அர்ச்சுனன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ரெயில்நிலைய பார்சல் அலுவலக சுவர்இடிந்து 2பேர் பலியானசம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.