ராஜஸ்தான் அரசியல் விவகாரம் : பாஜக நாளை ஆலோசனை

ராஜஸ்தானில் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நாளை பாஜக ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
Published on

ஜெய்பூர்,

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசின் முதல்-மந்திரி அசோக் கெலாட், துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்ட காலமாக அதிகார மோதல் இருந்து வந்தது. கடந்த சில நாட்களாக இந்த மோதல் பகிரங்கமாக வெடித்தது. இதையடுத்து, தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை அசோக் கெலாட், ஜெய்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச்சென்றார்.

102 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு, துணை முதல் மந்திரி பதவியும் பறிக்கப்பட்டது. அடுத்தடுத்த அரசியல் திருப்பங்களால் ராஜஸ்தான் அரசியலில் உச்சகட்ட பரப்பு நிலவுகிறது.

இந்த சூழலில், பாஜக நளை ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. தற்போது, தோல்பூர் நகரில் இருக்கும் பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜே, ஜெய்பூர் வந்ததகும் நாளை பாஜக ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com