ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சருக்கு வெள்ளி வாள் பரிசு

ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சருக்கு வெள்ளி வாள் பரிசாக வழங்கி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சருக்கு வெள்ளி வாள் பரிசு
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவ கல்லூரி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விழா மேடையில் எம்.ஏ.முனியசாமி, மாநில மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி ஆகியோர் முதல்-அமைச்சருக்கு ஆளுயர மாலை அணிவித்து வெள்ளி வாள் பரிசாக வழங்கினர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பரமக்குடி சதன் பிரபாகர், திருவாடானை கருணாஸ், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பால்பாண்டியன், ராம்கோ துணை தலைவர் சுரேஷ், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் செல்வராணி ரெத்தினம், மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் ஜெயஜோதி, போகலூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் சந்திரன், மாநில விவசாய அணி இணை செயலாளர் கர்ணன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர்கள் சோமாத்தூர் சுப்பிரமணியன், சாமிநாதன், டாக்டர் மனோஜ்குமார், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணக்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் செந்தில்குமார், நகர் அ.தி.மு.க. எஸ்.கே.ஜி.எஸ்.செல்வராஜ், அண்ணா தொழிற்சங்க பேரவை மத்திய சங்க முன்னாள் தலைவர் தமிழ்செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட பக்கவாத தீவிர சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்தார். இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் செந்தில், துணை தலைவர் சுரேந்திரன் மற்றும் உறுப்பினர்கள், மாநில செயலாளர் ரவிசங்கர், மாநில பொருளாளர் ராமு, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மூத்த துணை தலைவர் மலையரசு, தலைவர் சிவக்குமார், பொருளாளர் மனோஜ்குமார், செயலாளர் முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி அரசின் நலத்திட்ட பணிகள் குறித்த அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் சுகாதாரத்துறை, குடும்ப நலத்துறை மற்றும் ராமநாதபுரம் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை முதல்-அமைச்சர் பார்வையிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com