ராணிப்பேட்டை மாவட்டம் தொடங்குவதையொட்டி முதல்-அமைச்சர் பங்கேற்கும் விழா பந்தலுக்கு கால்கோள் பணிகளை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்

ராணிப்பேட்டை மாவட்ட தொடக்க விழாவிற்கு முதல் -அமைச்சர் வருகை தருவதை ஒட்டி விழா பந்தல் அமைப்பதற்கு கால்கோள் அமைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி பணிகளை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்.
Published on

சிப்காட் (ராணிப்பேட்டை),

வேலூர் மாவட்டத்திலிருந்து ராணிப்பேட்டை மாவட்டம் புதிதாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா வருகிற 28-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இந்த விழா ராணிப்பேட்டை பாரதி நகர் அருகே உள்ள கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலையம் (ஐ.வி.பி.எம்) வளாகத்தில் உள்ள காலி மைதானத்தில் நடக்கிறது.

இதனையடுத்து அந்த இடத்தை சுத்தப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி, உதவி கலெக்டர் இளம்பகவத் உள்பட அதிகாரிகள் முன்னின்று செய்து வருகின்றனர்.

முன்னதாக இந்த இடத்தில் விழா பந்தல் அமைக்க கால்கோள் நடும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கால்கோள் நட்டு விழாப்பந்தல் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இதில் கலெக்டர்கள் சண்முகசுந்தரம் (வேலூர்) திவ்யதர்ஷினி (ராணிப்பேட்டை), வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் இளம்பகவத், சம்பத் எம்.எல்.ஏ, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சுமைதாங்கி ஏழுமலை, சிவசங்கரன், முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வி, நகர செயலாளர்கள் என்.கே.மணி, மோகன், இப்ராகிம்கலிலுல்லா, ஜிம்.சங்கர், ஒன்றிய செயலாளர்கள் பெல்.தமிழரசன், பெல்.கார்த்திகேயன், சோமநாதபுரம் சின்னதுரை, ஏ.ஜி.விஜயன், பழனி, ராதாகிருஷ்ணன், பிரகாஷ், சாலை பழனி, சுபாஷ், அன்பழகன், சாரதி, பேரூராட்சி செயலாளர்கள் தினகரன், சதீஷ், ராமு, மாவட்ட பொருளாளர் ஷாபுதீன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எம்.சி.பூங்காவனம்,

ராணிப்பேட்டை நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.எம்.சுகுமார், முன்னாள் தலைவர் கே.பி.சந்தோஷம், வேலூர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வக்கீல் அ.கோ.அண்ணாமலை, மாவட்ட தலைவர் வக்கீல் நேதாஜி,

மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் ஏ.வி.சாரதி, முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் கோரந்தாங்கல் குமார், ராணிப்பேட்டை நகர அவைத்தலைவர் குமரன், நகர பொருளாளர் ராமமூர்த்தி, அ.தி.மு.க.பிரமுகரும் தொழில் அதிபருமான டி.எஸ்.கே.குமரேசன், முன்னாள் நகர செயலாளர் சம்பந்தம், நகர அணிகளின் நிர்வாகிகள் சேதுராமன், அசோகன், வாசுதேவன், பாஸ்கர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சுனன் உள்பட நிர்வாகிகளும், பிரமுகர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com