சென்னை,
சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் முன்னதாக இருந்த எண்ணிக்கையை விட சற்று குறைந்து வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கவலை அளிக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்களை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது. இதில் சென்னையில் தற்போது வரை 13,941 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 73,681 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
சிகிச்சை பெறுவோர் விவரம் பின்வருமாறு:-
திருவொற்றியூர் - 450 பேர்
மணலி - 206 பேர்
மாதவரம் - 354 பேர்
தண்டையார்பேட்டை - 753 பேர்
ராயபுரம் - 933 பேர்
திருவிக நகர் - 1131 பேர்
அம்பத்தூர் - 926 பேர்
அண்ணா நகர் - 1656 பேர்
தேனாம்பேட்டை - 1176 பேர்
கோடம்பாக்கம் - 2029 பேர்
வளசரவாக்கம் - 701 பேர்
ஆலந்தூர்- 566 பேர்
அடையாறு - 1157 பேர்
பெருங்குடி - 331 பேர்
சோழிங்கநல்லூர் - 1199 பேர்