

லக்னோ,
உத்தர பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் பலியாகினார். இந்த வன்முறை சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தின்ரை நேரில் சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். அதேபோல், மாநில முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ்யாதவ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
உத்தர பிரதேச வன்முறை சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், வன்முறை சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது. அதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 45 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என யோகி ஆதித்யநாத் அரசு அறிவித்துள்ளது.
செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஏடிஜி (சட்டம் ஒழுங்கு) பிரஷாந்த் குமார் இது குறித்து மேலும் கூறியதாவது: - உயிரிழந்த 4 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.45 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். விவசாயிகளின் புகார் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.