ரிஷிவந்தியம், மேல்மலையனூரில் திருமணக்கோலத்தில் வாக்களித்த புதுமண தம்பதிகள்

ரிஷிவந்தியம், மேல்மலையனூரில் புதுமண தம்பதிகள் திருமணக்கோலத்தில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர்.
ரிஷிவந்தியம், மேல்மலையனூரில் திருமணக்கோலத்தில் வாக்களித்த புதுமண தம்பதிகள்
Published on

ரிஷிவந்தியம்,

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி ரிஷிவந்தியம் அருகே உள்ள முனிவாழை கிராமத்தை சேர்ந்தவர் பச்சை மகன் கார்த்திகேயன் (வயது 30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகள் மஞ்சு(25) என்பவருக்கும் நேற்று காலை ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்ததும், புதுமண தம்பதியினர் சொந்த ஊரான முனிவாழைக்கு வந்தனர். பின்னர் மணமக்கள் இருவரையும் உறவினர்கள் முனிவாழை அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்துக்கு காரில் அழைத்து சென்றனர்.

அங்கு மணமக்கள் கார்த்திகேயன், மஞ்சு ஆகிய இருவரும் வாக்குச்சாவடி மையத்துக்குள் சென்றனர். இதனை தொடர்ந்து மணமக்கள் இருவரும் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்களித்து விட்டு, மீண்டும் காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரை சேர்ந்தவர் விஜயகுமார்(28). இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள மல்லிகாபுரத்தை சேர்ந்த புவனேஸ்வரி(25) என்பவருக்கும் நேற்று காலை மேல்மலையனூரில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் மணமக்கள் இருவரும் மேல்மலையனூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்துக்கு மணக்கோலத்தில் சென்றனர். பின்னர் மணமகன் விஜயகுமார் மட்டும் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். இதனை தொடர்ந்து மணமகள் புவனேஸ்வரி வாக்களிப்பதற்காக மணமகன் மற்றும் உறவினர்களுடன் மல்லிகாபுரத்துக்கு புறப்பட்டு சென்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com