அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.73.34 ஆக சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.73.34 ஆக சரிவடைந்து உள்ளது.
Published on

மும்பை,

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது ரூ.73.26 ஆக இருந்தது. அதன்பின் தொடர்ந்து அது பலவீனமடைந்தது. இதனால் கடந்த திங்கட்கிழமை ரூ.72.91 என்ற மதிப்பில் முடிவடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு 43 பைசாக்கள் வீழ்ச்சி கண்டு முதன்முறையாக இன்று ரூ.73.34 ஆக சரிவடைந்தது.

உலக அளவில் எண்ணெய் விலை உயர்வு மற்றும் இறக்குமதியாளர்களுக்கு அதிக அளவு அமெரிக்க டாலர் தேவை ஆகியவற்றால் இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்துள்ளது.

இதேவேளையில் மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது, சென்செக்ஸ் குறியீடு 137.62 புள்ளிகள் சரிவடைந்து 36,388.52 புள்ளிகளாக உள்ளது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று பங்கு சந்தைகள் மூடப்பட்டு இருந்தன.

X

Daily Thanthi
www.dailythanthi.com