இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு திருக்கச்சூர் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த அழகேசன் (வயது 26), என்பவர் கஞ்சா பொட்டலங்களை விற்பதற்காக நின்று கொண்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அழகேசனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.அதேபோல பொத்தேரி ஏரிக்கரை அருகே கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்வதற்கு நின்றுகொண்டிருந்த காட்டாங்கொளத்தூர் குட்டி என்கிற ராகவேந்திரன் (50), காவனூர் சதீஷ்குமார் (23), ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.