காசியாபாத்,
கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சத்தில் மக்கள் பாதுகாப்புக்காக முகக்கவசம் மற்றும் கைகழுவும் சோப்புகளை வாங்கி வருகிறார்கள். உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள சில மருந்து கடைகளில் இவைகளை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக புகார்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மருந்து கடைகளில் சோதனை நடத்த உத்தரவிட்டது. அதிகாரிகள் மருந்து கடைகளுக்கு சென்று முகக்கவசம் வாங்கினர். சில கடைகளில் கூடுதல் விலைக்கு விற்றதுடன், பில் தர மறுத்தனர். இதுதொடர்பாக 5 மருந்து கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.