ஸ்ரீநகர்,
காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மக்களவை தொகுதியில் இன்று மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த மக்களவை தேர்தலை புறக்கணிக்க கோரி பிரிவினைவாதிகள் பொதுமக்களை கேட்டுக்கொண்டனர்.
மக்களவை தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஹூரியத் கான்பரன்ஸ் தலைவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு எதிராக என்.ஐ.ஏ மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கண்டித்து பிரிவினைவாதிகள் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.
பிரிவினைவாதிகள் முழு அடைப்பு அழைப்பால், காஷ்மீரில் இன்று இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கடைகள், வணிகவளாகங்கள், கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. எனினும் பாரமுல்லா தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.