நெல்லை,
நெல்லை மாவட்டம் களக்காட்டை சேர்ந்த அருணாசலம் மகன் வினோத் என்ற வினோத் கண்ணன் (வயது 30). இவர் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 7 வயது சிறுமியை பார்த்தார். பின்னர் அந்த சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனைக்கண்ட அந்த சிறுமியின் தாயார், வினோத்தை கண்டித்தார். அப்போது வினோத் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்தார். அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகம் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்தார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நீதிபதி இந்திராணி வழக்கை விசாரித்து, வினோத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராத தொகையில் ரூ.25 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அளிக்குமாறும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பால்கனி ஆஜரானார்.