திண்டுக்கல்லில் நடந்த சிவாஜி பிறந்தநாள் விழாவில், ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

நடிகர் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்தநாளையொட்டி, திண்டுக்கல்லில் மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். விழாவில் பாண்டியன் என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
Published on

திண்டுக்கல்,

நடிகர் திலகம் என உலகமே போற்றும் சிவாஜி கணேசனின் 94ஆவது பிறந்தநாள் இன்று. இதனையொட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அவரது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்ட பகுதியில் சிவாஜி கணேசன் உருவப்படத்திற்கு ரசிகர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சிவாஜி கணேசனை போற்றும் விதமாக அப்பகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கி இவ்விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரசிகர்கள் பலரும் பங்கேற்றனர்.

திண்டுக்கல்லில் நடந்த சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழாவில் பாண்டியன் என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com