ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தின் இமாம் சாகிப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் இன்று காலை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு படையினரை கண்டதும் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். இந்த என்கவுண்டரில் ஏற்பட்ட சேதவிவரங்கள் வெளியாகவில்லை. தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com