சிந்துதுர்க் விமான நிலையம் மே 1-ந் தேதி திறப்பு; உத்தவ் தாக்கரே தகவல்

மராட்டிய சட்டசபையில் நேற்று கடலோர கொங்கன் பிராந்தியத்தின் வளர்ச்சி குறித்து விவாதம் நடந்தது. அப்போது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசியதாவது:-
சிந்துதுர்க் விமான நிலையம் மே 1-ந் தேதி திறப்பு; உத்தவ் தாக்கரே தகவல்
Published on

மும்பை,

சிந்துதுர்க் சிபியில் அமைக்கப்பட்டு உள்ள விமான நிலையம் மராட்டிய தினமான மே 1-ந் தேதி பயன்பாட்டுக்கு திறக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.

கொங்கன் கடற்கரையில் நீர்மூழ்கிக் கப்பல் பயணத்தை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. கொங்கன் கடலோர சாலையும் விரைவுபடுத்தப்படும். குடிநீர் வழங்கல், மாம்பழம் மற்றும் முந்திரி உற்பத்தி மற்றும் கொங்கனில் மீனவர்களின் குறைகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மாநில அரசாங்கம் தீர்வு காணும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com