ஏ.எஸ்.யு.எஸ். ஆர்.ஓ.ஜி

ஏ.எஸ்.யு.எஸ். நிறுவனம் புதிதாக ஆர்.ஓ.ஜி. போன் 6 என்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது.
ஏ.எஸ்.யு.எஸ். ஆர்.ஓ.ஜி
Published on

இது 6.78 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டுள்ளது. சாம்சங் அமோலெட் ஹெச்.டி.ஆர். டிஸ்பிளே உடையது.

இதில் முதல் முறையாக ஸ்நாப்டிராகன் 8 பிளஸ் ஜெனரேஷன் 1 எஸ்.ஓ.சி. பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 8 ஜி.பி., 12 ஜி.பி., 16 ஜி.பி. மற்றும் 18 ஜி.பி. ரேம்களைக் கொண்டதாகவும், அதிகபட்சம் 512 ஜி.பி. நினைவகம் கொண்டதாகவும் மாடல்கள் வந்துள்ளன. இதில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 12 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. இதன் எடை 230 கிராம்.

6 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 65 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. கருப்பு, வெள்ளை வண்ணங்களில் வந்துள்ள இந்த மாடலின் விலை சுமார் ரூ.71,999 முதல் ஆரம்பமாகிறது. 18 ஜி.பி. ரேம் மற்றும் 512 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.1,06,070.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com