

விளையாடுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், அறிவாற்றலை வளர்க்கவும் மிகவும் அவசியம். தொடர்ந்து விளையாடுவதால் உடலின் உறுதி, சுறுசுறுப்பு, மற்றும் சீரான ரத்த ஓட்டம் ஆகியவை மேம்படுகின்றன. வியர்வை மூலம் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி, இதயத்தின் செயல்பாடு சீராகிறது. கடினமான வேலைகள் அல்லது சூழ்நிலைகளில் இருந்து மனதை திசை திருப்பி, மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்களைக் குறைக்கவும் விளையாட்டு உதவுகிறது.
இப்படியாக ஒவ்வொரு விளையாட்டுகளும் நிச்சயமாக நமது உடல்நலம் மற்றும் மனநலத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. விளையாட்டின் தன்மையை பொறுத்து அந்த தாக்கம் நேர்மறையானதாகவோ அல்லது எதிர்மறையானதாகவோ இருக்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் வைரலான புளூ வேல் (Blue Whale) என்ற விளையாட்டு பலரது உயிர்களை பறித்தது. இன்றும் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்படி எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் சில விளையாட்டுகளும் இருக்கின்றன.
செல்போனில் விளையாடும் விளையாட்டுகள் பெரும்பாலும் எதிர்மறை தாக்கத்தையே ஏற்படுகின்றன. குழந்தைகளின் மனநலத்தை அவை பாதிக்கின்றன. அவர்களின் உடல்நலத்துக்கும் அவை எந்த விதத்திலும் உதவுவதில்லை.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் குழந்தைகளின் உடல்நலத்தை மட்டுமன்றி, அவர்களின் மனநலத்தையும் மேம்படுத்துகின்றன. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, ஊக்கம் என அந்த விளையாட்டுகள் இளம் தலைமுறையினருக்கு வாழ்க்கைப் பாடங்களையும், அறநெறிகளையும் கற்றுக் கொடுக்கின்றன. அப்படி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் ஒவ்வொன்றும் கற்றுத்தரும் பாடங்களை இந்த கட்டுரையில் காண்போம்.
ஏற்றம், இறக்கம் இரண்டும் வாழ்க்கையின் இயல்பு என்பதை கற்றுக்கொடுக்கும் விளையாட்டு. மேலே ஏறிவிட்டோம் என்று பெருமூச்சு விட்டு பெருமைப்படக்கூடாது. நம்மை கீழே தள்ளிவிட ஆபத்துகள் காத்துக்கொண்டு இருக்கின்றன என்றும், கீழே விழுந்துவிட்டோம் என்று வருத்தப்படக்கூடாது; நம்மை ஏற்றிவிட ஏணிகள் இருக்கின்றன என்றும் சொல்லி நமக்கு எச்சரிக்கையையும், ஊக்கத்தையும் கற்றுக்கொடுக்கும் விளையாட்டு.
எத்தனை முறை வெட்டி வெளியில் வீசினாலும் மறுபடியும் தொடக்கத்தில் இருந்து தொடங்கி இலக்கை அடைய வேண்டும் என்ற விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையும் கற்றுத் தரும் விளையாட்டு.
நகர்வதற்கு இனி எந்த இடமும் இல்லை எனும் சூழ்நிலை வரும் வரை போராட வேண்டும் என்ற போராட்ட குணத்தையும், விவேகத்தையும் கற்றுக்கொடுக்கும் விளையாட்டு.
வாழ்வில் ஒளிந்திருக்கும் பொக்கிஷங்களை எந்த பிரச்சினையிலும் சிக்கிக் கொள்ளாமல், பொறுமையோடு தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்கும் விளையாட்டு.
அதிகமாக இருக்கும் இடத்தில் இருந்து எடுத்து, இல்லாத இடத்தில் நிரப்ப வேண்டும் என்ற ஈகைப் பண்பை, பகிர்வு மனப்பான்மையை வளர்க்கும் விளையாட்டு.
பிறரைப் போல சமமாக இல்லாமல் போனாலும், நம்மாலும் மற்றவர்களைப் போல சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையையும், ஊக்கத்தையும் கற்றுத்தரும் விளையாட்டு.
அடுக்குவதும், பின்னர் சரிப்பதும் என்று அதன் மூலமாக நம்மால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். எனவே எந்த ஒரு செயலையும் கவனத்தோடு செய்ய வேண்டும் என்ற எச்சரிக்கையை சொல்லித்தரும் விளையாட்டு.
தமிழ்நாட்டின் கிராமங்களில் முன்பு சடுகுடு என்று குறிப்பிடப்பட்ட வீரத்தை கற்றுத்தரும் விளையாட்டு. இந்த விளையாட்டை சங்ககாலப் போர் முறையின் எச்சமாக நாட்டுப்புறவியலாளர்கள் கருதுகின்றனர். தம் நாட்டின் மீது படையெடுத்து வரும் எதிரி நாட்டவனின் மூச்சை அடக்கி புற முதுகிட்டு ஓடச்செய்வதையும், எதிரி நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அங்குள்ளோரை அடித்து வெற்றி காண்பதையும் பாவனையாக வெளிப்படுத்துவதாக கபடியின் ஆட்டக் கூறுகள் அமைந்துள்ளன.
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் விளையாட்டுகளில் ஈடுபடுவதை ஊக்கப்படுத்த வேண்டும். படிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விளையாட்டுக்கும் கொடுக்க வேண்டும். அது அவர்களது உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும். மேலும் அவர்கள் என்ன விளையாட்டுகளை விளையாடுகிறார்கள் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். செல்போனில் விளையாடுவதை ஊக்கப்படுத்தக் கூடாது.
'ஓடி விளையாடு பாப்பா; நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா' என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப அவர்கள் ஓடியாடி விளையாடுவதை ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு விளையாட்டும் குழந்தைகளை உருவாக்குகின்றன. எல்லா வாழ்வியல் நெறிகளையும் பெற்று புது தெம்புடன் புதிய தலைமுறை உருவாகட்டும்..!