14 இரட்டை சதங்கள்... அதில் 8 இந்தியர்களுடையது - ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வீரர்களின் ஆதிக்கம்

ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் என்பது அரிதான சாதனையாகும்.
ஒருநாள் கிரிக்கெட்
Published on: 

சென்னை,

சச்சின் முதல் புரூக் வரை ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய வீரர்களின் முழுப் பட்டியலை தற்போது காண்போம்.

14 முறை

ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் என்பது அரிதான சாதனையாகும். இதுவரை ஆண்கள் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 14 முறை இரட்டை சதங்கள் பதிவாகியுள்ளன. அதில் அதிகபட்சமாக ரோகித் சர்மா மூன்று முறை இரட்டை சதம் அடித்துள்ளார்.

முதல் வீரர் சச்சின்

2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழக்காமல் 200 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஆண்கள் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார்.

அவரைத் தொடர்ந்து வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா, கிறிஸ் கெயில், மார்ட்டின் கப்டில் உள்ளிட்ட வீரர்கள் இந்தச் சாதனையை நிகழ்த்தினர்.

ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த வீரர்கள் பட்டியல்

சச்சின் (இந்தியா): 200

சேவாக் (இந்தியா): 219

ரோகித் சர்மா (இந்தியா): 209, 264, 208

கிறிஸ் கெயில் (வெஸ்ட் இண்டீஸ்): 215

மார்ட்டின் கப்டில் (நியூசிலாந்து): 237

பகர் ஜமான் (பாகிஸ்தான்): 210

இஷான் கிஷன் (இந்தியா): 210

ஷுப்மன் கில் (இந்தியா): 208, 223

கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா): 201

பதும் நிசங்கா (இலங்கை): 210

ஹாரி ப்ரூக் (இங்கிலாந்து): 202

அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்

இந்திய அணியின் ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று முறை இரட்டைச் சதம் அடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 209 ரன்களும், இலங்கைக்கு எதிராக 264 மற்றும் 208 ரன்களும் எடுத்துள்ளார்.

அவர் இலங்கைக்கு எதிராக எடுத்த 264 ரன்களே ஆண்கள் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை பதிவான அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக உள்ளது.

அதிவேக இரட்டை சதம்

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக், நேற்று இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 114 பந்துகளில் இரட்டை சதத்தை எட்டினார். இதற்கு முன்பு சுப்மன் கில் 117 பந்துகளில் இரட்டை சதம் அடித்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com