

ஹூயாவெய் நிறுவனம் வயர்லெஸ் இயர்போன்களை பிரீபட்ஸ் 4-ஐ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இதில் உள்ள பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 மணி நேரம் செயல்படும். முப்பரிமாண வடிவில் இது காதினுள் சிறப்பாக பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எடை குறைவாக இருப்பதால் இது காதில் வலியை ஏற்படுத்தாது.
இதில் பீம்பார்மிங் எனும் தொழில்நுட்பம் உள்ளதால் மறுமுனையில் பேசுவோரது குரல் துல்லியமாகக் கேட்கும். மேலும் காற்றின் இரைச்சல் உள்புகாதவாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் புளூடூத் 5.2 இணைப்பு உள்ளது. சிவப்பு, வெள்ளை, கருப்பு நிறங்களில் வந்துள்ள இதன் விலை சுமார் ரூ.5,600.