ரூபாய் மதிப்பில் இரும்புத்தாது ஏற்றுமதி 36 சதவீதம் உயர்ந்தது

நவம்பர் மாதத்தில் ரூ.1,409 கோடிக்கு இரும்புத்தாது ஏற்றுமதி ஆகி இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது ரூ.1,034 கோடியாக இருந்தது. ஆக, ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி 36 சதவீதம் உயர்ந்துள்ளது.
ரூபாய் மதிப்பில் இரும்புத்தாது ஏற்றுமதி 36 சதவீதம் உயர்ந்தது
Published on

டாலர் மதிப்பு அடிப்படையில் அதன் ஏற்றுமதி 37 சதவீதம் உயர்ந்து 20 கோடி டாலராக அதிகரித்து இருக்கிறது. சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் அது 14 கோடி டாலராக இருந்தது.

நம் நாட்டில், சென்ற நிதி ஆண்டில் (2018-19), கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத சாதனையாக 22 கோடி டன் இரும்புத்தாது உற்பத்தி ஆகி உள்ளது. முந்தைய ஆண்டில் (2017-18) அது 20 கோடி டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது உற்பத்தி 9.5 சதவீதம் உயர்ந்துள்ளது. உருக்கு உற்பத்தியில் இரும்புத்தாது மிக முக்கியமான மூலப்பொருளாக இருக்கிறது. 2029-30-ஆம் நிதி ஆண்டுக்குள் கச்சா உருக்கு உற்பத்தி திறனை 30 கோடி டன்னாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com