லெனோவா பி 11 டேப்லெட்

கம்ப்யூட்டர் சார்ந்த மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் லனோவா நிறுவனம் பி 11 என்ற பெயரில் 5-ஜி அலைக் கற்றையில் செயல்படக் கூடிய புதிய ரக டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது.
லெனோவா பி 11 டேப்லெட்
Published on

6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.29,999. இதில் ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் பிராசஸர் உள்ளது.

இதில் நான்கு ஜே.பி.எல். ஸ்பீக்கர்கள் உள்ளன. 12 மணி நேரம் செயல்பட வசதியாக 7,700 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளது. பின்புறம் 13 மெகா பிக்ஸெல் கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் உள்ள மாடலின் விலை சுமார் ரூ.34,999.

X

Daily Thanthi
www.dailythanthi.com