

உலகம் முழுவதும் தொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடு என பல்வேறு துறைகளில் சாதித்து கோடிக்கணக்கில் செல்வத்தை குவித்துள்ள தொழிலதிபர்கள் பலர் உள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு பங்குச்சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தினமும் மாறுபட்டு வருகிறது. அந்த வகையில், ஆகஸ்ட் 1, 2026 நிலவரப்படி உலகின் டாப்-10 பணக்காரர்களின் பட்டியலை ‘ஃபோர்ப்ஸ்’ வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தில் யார் இருக்கிறார்? மற்ற இடங்களை பிடித்துள்ள கோடீஸ்வரர்கள் யார்? அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு? என்பதை பார்க்கலாம்.
உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். உலக பெரும் பணக்காரர்களின் பட்டியலில் டாப் பணக்கார்களின் மொத்த சொத்து மதிப்பு 140 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது. பட்டியலில் முதல் 10 இடங்கள் இருப்பவர்கள் விவரம் வருமாறு:
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்கள் மூலம் உலகின் நம்பர்-1 பணக்காரராக உள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.65.65 லட்சம் கோடியாக உள்ளது.
அவரைத் தொடர்ந்து கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி பேஜ் 2-வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் ரூ.27.78 லட்சம் கோடியாகும். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 3-வது இடத்திலும் உள்ளனர். கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் 5-வது இடத்திலும், ஆரக்கிள் இணை நிறுவனர் லாரி எலிசன் 6-வது இடத்திலும் உள்ளனர்.
பிரான்சைச் சேர்ந்த ஆடம்பர பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான எல்விஎம்ஹெச்-ன் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் குடும்பத்தினர் 7-வது இடத்தில் உள்ளனர்.என்விடியா தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் 8-வது இடத்திலும், பெர்க்ஷயர் ஹாத்வே தலைவர் வாரன் பஃபெட் 9-வது இடத்திலும் உள்ளனர். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜாரா நிறுவனத்தின் உரிமையாளர் அமான்சியோ ஒர்டேகா 10-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் உள்ள 10 பேரில் 9 பேர் அமெரிக்காவை சேர்ந்தவர்களே ஆவர். இந்திய தொழிலதிபர்கள் யாரும் டாப் 10 க்குள் இல்லை. ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி 22 வது இடத்தில் உள்ளார். அதானி குழுமங்களின் தலைவர் கவுதம் அதானி இந்த பட்டியலில் 24 வது இடத்தில் உள்ளார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.8.71 லட்சம் கோடியாக இருக்கும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதானியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.8. லட்சம் கோடியை தொடும் என போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.