காற்று மாசுபாடு: டெல்லியை முந்திய மும்பை

இந்தியாவில் காற்று மாசுபாடு மிகுந்த நகரம் எது என்றால் அனைவருக்கும் சட்டென்று டெல்லிதான் நினைவுக்கு வரும். ஆனால் டெல்லியை பின்னுக்குத் தள்ளிவிட்டு மும்பை முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
காற்று மாசுபாடு: டெல்லியை முந்திய மும்பை
Published on

சுவிஸ் ஏர் டிராக்கிங் இன்டெக்ஸ் நிறுவனம் அளவீடு செய்த காற்று தரக்குறியீட்டின் படி உலக அளவில் காற்று மாசுபாடு மிகுந்த நகரங்களின் பட்டியலில் மும்பை இரண்டாம் இடம் பிடித்தும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

சுவிஸ் ஏர் டிராக்கிங் இன்டெக்ஸ் நிறுவனம் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பகிர்ந்துள்ள தகவல்களை பயன்படுத்தி இந்தியாவில் சில நிறுவனங்களுடன் இணைந்து காற்றின் தரத்தை கணக்கிடுகிறது. அமெரிக்க காற்று தரக் குறியீட்டு தரநிலைகளின்படி காற்றின் தரத்தை 'ஆரோக்கியமானது', 'ஆரோக்கியமற்றது' மற்றும் 'அபாயகரமானது' என வகைப்படுத்துகிறது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, இந்தக் குளிர்காலத்தில் குறிப்பாக நவம்பர் - ஜனவரி மாதங்களில் மும்பையில் காற்றின் தரம் 'மோசமான' மற்றும் 'மிகவும் மோசமான' நிலையில் இருந்துள்ளது. இது முந்தைய மூன்று ஆண்டுகளில் கடந்து சென்ற குளிர்காலத்தை விட அதிகமாகும்.

தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் மும்பையில், காற்றில் கலந்துள்ள மாசு துகள்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை கட்டுமான தூசுக்கள் என்பது கண்டறியப்பட்டது. மீதமுள்ள மாசுக்கள் தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் கழிவுக் கிடங்குகள் மூலம் காற்றில் கலக்கின்றன.

உலகில் காற்று மாசு மிகுந்த நகரங்களின் பட்டியலில் மும்பை 2-வது இடம் பிடித்துள்ள நிலையில் டெல்லி முதல் 10 இடங்களுக்குள் இடம் பெறாதது ஆச்சரியம் அளித்துள்ளது. லாகூர் (பாகிஸ்தான்), மும்பை (இந்தியா), காபூல் (ஆப்கானிஸ்தான்), ஹோய்ஷியுங் (தைவான்), பிஷ்கெக் (கிர்கிஸ்தான்), அக்ரா (கானா), கிராகோவ் (போலந்து), தோஹா (கத்தார்), அஸ்தானா (கஜகஸ்தான்), சாண்டியாகோ (சிலி) ஆகிய நகரங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com