நோக்கியா சி 12

நோக்கியா ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தற்போது சி 12 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
நோக்கியா சி 12
Published on

இது 6.3 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டுள்ளது. இதில் ஆக்டாகோர் யுனிசாக் பிராசஸர் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் இயங்கு தளம் உள்ளது. 2 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்டது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி உள்ளது.

பின்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 5 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. 3 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட, கழற்றும் வகையிலான பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. சியான், சார்கோல், எலுமிச்சை நிறங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.10,470.

X

Daily Thanthi
www.dailythanthi.com