நோக்கியா சி 21 பிளஸ் ஸ்மார்ட்போன்

நோக்கியா போன்களைத் தயாரிக்கும் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிதாக சி 21 பிளஸ் என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
நோக்கியா சி 21 பிளஸ் ஸ்மார்ட்போன்
Published on

இது 6.5 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டது. இதில் ஆக்டாகோர் யுனிசாக் பிராசஸர் பயன்படுத்தப் பட்டுள்ளது. இது 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவகம் கொண்டது.

இதில் ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. இதன் பின்பகுதியில் 13 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 5 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளன. பின்புறம் விரல் ரேகை உணர் சென்சார் பகுதி உள்ளது. இதில் 5050 எம்.ஏ.ஹெச். பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமான பயன்பாட்டில் இது 3 நாட்கள் வரை நீடித்திருக்கும். இதன் எடை 191 கிராம்.

சியான், கிரே நிறங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.10,299. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் உள்ள மாடலின் விலை சுமார் ரூ.11,299.

X

Daily Thanthi
www.dailythanthi.com