நோக்கியா ஜி 60 ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் நோக்கியா நிறுவனம் ஜி 60 என்ற பெயரில் புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.
நோக்கியா ஜி 60 ஸ்மார்ட்போன்
Published on

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.29,999. பேக்கேஜிங்கில் மறு சுழற்சி செய்த பொருட்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இது 6.58 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டுள்ளது. இதில் ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் பயன்படுத்தப் பட்டுள்ளது. 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் உள்ளது. நினைவகத் திறனை 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்யலாம். ஆண்ட்ராய்டு 12 இயங்கு தளம் உள்ளது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 8 மெகாபிக்ஸெல் கேமராவும் உள்ளது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. புளூடூத் 5.1 இணைப்பு வசதி கொண்டது.

4,500 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 20 வாட் சார்ஜருடன் வந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com