ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை டக்-அவுட் ஆன வீரர்கள் - முதலிடத்தில் யார் தெரியுமா?

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை டக்-அவுட் ஆன வீரர்கள் பட்டியல் குறித்த விவரங்கள் கவனம் பெற்றுள்ளன.
ரோஹித் சர்மா
Published on: 

ஆக்லாந்து,

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை டக்-அவுட் ஆன வீரர்கள் யார்? என்பது குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்.

17-வது முறை

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அவர் 17-வது முறையாக டக்-அவுட் ஆகியுள்ளார்.

இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை டக்-அவுட் ஆன வீரர்கள் பட்டியல் குறித்த விவரங்கள் கவனம் பெற்றுள்ளன.

முதலிடத்தில் ஜெயசூர்யா

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை டக்-அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் இலங்கையின் முன்னாள் தொடக்க வீரர் சனத் ஜெயசூர்யா முதலிடத்தில் உள்ளார். அவர் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 34 முறை ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார்.

பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி 30 முறை டக்-அவுட் ஆகி 2-வது இடத்தில் உள்ளார். இலங்கையின் மஹேலா ஜெயவர்தனே, பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் ஆகியோர் தலா 28 முறை டக்-அவுட் ஆகி அடுத்த இடத்தில் உள்ளனர்.

ஒருநாள் போட்டிகளில் அதிக முறை டக்-அவுட் ஆன வீரர்கள்:

சனத் ஜெயசூர்யா (இலங்கை) 34

ஷாகித் அப்ரிடி (பாகிஸ்தான்) 30

மஹேலா ஜெயவர்தனே (இலங்கை) 28

வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்) 28

லசித் மலிங்கா (இலங்கை) 26

இந்திய வீரர்களில் சச்சின் முதலிடம்

இந்திய வீரர்களைப் பொறுத்தவரை, முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் 20 முறை டக்-அவுட் ஆகி முதலிடத்தில் உள்ளார். ஜவகல் ஸ்ரீநாத் 19 முறையும், அனில் கும்ப்ளே மற்றும் யுவராஜ் சிங் தலா 18 முறையும் டக்-அவுட் ஆகியுள்ளனர். ரோஹித் சர்மா, ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா 17 முறை ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளனர்.

X