ஓப்போ ஏ 16 ஸ்மார்ட்போன்

ஓப்போ நிறுவனம் புதிதாக ஏ 16 என்ற பெயரிலான ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.
ஓப்போ ஏ 16 ஸ்மார்ட்போன்
Published on

ஓப்போ நிறுவனம் புதிதாக ஏ 16 என்ற பெயரிலான ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. இது 6.52 அங்குல திரையைக் கொண்டது. இதில் ஆக்டா கோர் மீடியா டெக் ஹீலியோ ஜி 35 எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினை வகம் கொண்டது. இதை 256 ஜி.பி. வரை அதிகரித்துக் கொள்ளலாம்.

இதில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளது. பின்புறத்தில் 13 மெகா பிக்ஸெல் கேமரா, முன்பகுதியில் 8 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. பக்க வாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. நீலம், கருப்பு ஆகிய நிறங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட் போனின் விலை சுமார் ரூ.13,990.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com