ஓப்போ ரெனோ 8 டி ஸ்மார்ட்போன்

ஓப்போ நிறுவனம் ரெனோ 8 டி என்ற பெயரில் புதிய ரக ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.
ஓப்போ ரெனோ 8 டி ஸ்மார்ட்போன்
Published on

இதில் 6.7 அங்குல ஹெச்.டி. அமோலெட் திரை, ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் பிராசஸர் உள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் உள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. பின்புறம் 108 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 32 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர், 4800 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 67 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. கருப்பு, தங்க நிறங்களில் இது கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.29,999.

X

Daily Thanthi
www.dailythanthi.com