சண்டே ஸ்பெஷல்: சுவையான, தித்திப்பான சேமியா கேசரி செய்வது எப்படி..?

இந்த வாரம் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் சுவையான, தித்திப்பான சேமியா கேசரி செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கப்போகிறோம்.
சண்டே ஸ்பெஷல்: சுவையான, தித்திப்பான சேமியா கேசரி செய்வது எப்படி..?
Published on

தேவையான பொருட்கள்:-

நெய் - 3 டேபிள் ஸ்பூன்

முந்திரி - ஒரு கைப்பிடி

உலர் திராட்சை - ஒரு கைப்பிடி

சேமியா - 1 கப்

தண்ணீர் - 2 கப்

சர்க்கரை - 1 கப்

உப்பு - ஒரு சிட்டிகை

கேசரி பவுடர் - சிறிதளவு

ஏலக்காய் பொடி - சிறிதளவு

செய்முறை:-

முதலில் கியாஸ் அடுப்பை 'ஆன்' செய்து, வாய் அகன்ற பாத்திரம் ஒன்றை வைக்கவும். பாத்திரம் சூடாகியதும், அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றவும். நெய் உருகியதும் அதில் முந்திரி, உலர் திராட்சையை சேர்த்து வறுக்கவும். முந்திரி பொன் நிறமாகவும், உலர் திராட்சை உப்பிக்கொண்டு பலூன் போல் வந்தவுடன், அதை வெளியே எடுத்து வைக்கவும். பின்னர், அதே நெய்யில் சேமியாவை போட்டு பொன் நிறமாக வறுக்கவும். பிறகு அதை வேறொரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அடுத்து வாய் அகன்ற மற்றொரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதில் வறுத்து வைத்த சேமியாவை சேர்க்கவும். சேமியா நன்கு வெந்த பிறகு, சர்க்கரை சேர்க்கவும். நன்கு கிளறிவிட்டு, உப்பை சேர்க்கவும். கெட்டியான பதத்திற்கு வரும்போது, கேசரி பவுடரை சிறிதளவு தண்ணீர் கலக்கி சேர்க்கவும்.

நன்கு கெட்டியானதும் வாசனைக்காக ஏலக்காய் பொடி, வறுத்து வைத்த முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை சேர்த்து கிளறி விடவும். நிறைவாக, ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும். சுவையான, தித்திப்பான சேமியா கேசரி ரெடி.

X

Daily Thanthi
www.dailythanthi.com