வீட்டு வேலையில் வினோதம்

பெருநகரங்களில், கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் நிலையில் வீட்டு வேலைக்கு எனத் தனியாக வேலையாட்கள் நியமிக்கின்றனர். ஆனால் இந்தியாவில் இதற்கான பெரிய நிறுவனங்கள் இல்லை என்றாலும், வெளிநாடுகளில் அதிகமாக இருக்கின்றன.
வீட்டு வேலையில் வினோதம்
Published on

இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் பிளேமவுத் என்ற பகுதியில் இதுபோன்று வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் ஒன்று வித்தியாசமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறு வனத்திற்கு தி நேக்கட் கிளன்ஸிங் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்த நிறுவனத்தை நிக்கி பெல்டோன்-லியன் வுல்மேன் தம்பதிகள் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தில் என்ன வித்தியாசம் என்றால், வீட்டு வேலைகளுக்குச் செல்லும் பெண்கள் வேலை செய்யும் சமயத்தில் கவர்ச்சியாக உடை அணிந்தோ அல்லது நிர்வாணமாகவோதான் வேலை செய்ய வேண்டுமாம். அதற்கேற்ப இந்நாடுகளில் இது போன்ற நிறுவனங்களுக்கு சட்டவிதிமுறை மீறல்கள் இல்லை. எனவே அங்கு தைரியமாக நடத்துகின்றனர். இந்நிறுவனத்திற்கு பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது.

கொரோனா லாக்டவுனில் எல்லோரும் வீட்டிலேயே முடங்கிவிட்டனர். வீட்டு வேலை அதிகமாகிவிட்டது. அதை கருத்தில் கொண்டுதான், வீட்டு பணியாளர்கள் சேவை மையத்தை தொடங்கினேன். ஆரம்பத்தில் வழக் கத்தைபோலவே, வீட்டு வேலைகளை செய்ய சாதாரண பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் வாடிக்கையாளர்கள், இந்த சேவையில் வேறு என்ன புதுமை செய்ய இருக்கிறீர்கள்..? என்று கேட்டுக்கொண்டே இருந்தனர். இதில் என்ன வித்தியாசம் காண்பிக்க முடியும்..? என்ற யோசனையில்தான், அரை குறை ஆடை பணியாளர்கள், பணியமர்த்தப்பட்டனர். இந்த யோசனைக்கு அடித்தளமிட்டது, என் கணவர்தான் என்றார், நிக்கி பெல்டோன்.

இந்த யோசனையை விளையாட்டாகவே நிக்கியிடம் கூறினேன். அவள் அதை சீரியஸாக எடுத்து கொண்டு, சக ஊழியர்களிடம் பேசினாள். என்ன ஆச்சரியம் என்றால்...?, கொரோனா லாக்டவுனில் சிக்கி தவித்த பணியாளர்களுக்கும் கூடுதல் வருமானம் தேவைப்பட்டதால், அவர்களும் இந்த யோசனைக்கு இசைந்து கொடுத்தனர். எல்லாமே தயார். வாடிக்கையாளர்களிடம் கூறியபோது, அவர்களும் ஆவலாக இருந்தனர். முதலில் இங்கிலாந்தில் இந்த சேவையை தொடங்கினோம். நல்ல வரவேற்பு கிடைக்கவே, இன்று வரை தொடர்ந்து வருகிறோம். இந்த ஆடை யோசனை, என் மனைவிக்கு பிடித்துபோக, அருகில் இருக்கும் வீடுகளுக்கு அவளே நேரடியாக களம் காண்கிறாள் என்று முடித்தார், லியன் வுல்மேன்.

இங்கிலாந்தை தொடர்ந்து இந்த திட்டத்தை அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த நிறுவனத்திற்கு துபாயிலும் வரவேற்பு உள்ளது என்று கூறப்படுகிறது. அதேவேளையில் அந்நாட்டில் இதை சட்டப்பூர்வமாக நடத்துவதற்கான வழிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்களாம். அங்கு நடத்த அனுமதி கிடைத்தால் துபாயிலும் இந்த நிறுவனம் செயல்படும் என அந்நிறு வனத்தினர் அறிவித்துள்ளனர். குறிப்பாக இந்த நிறுவனம் இந்த லாக்டவுன் காலத்தில் பிரபலமாகியுள்ளது. ஊரடங்கிற்கு பிறகு பலரும் இந்த

நிறுவனத்தில் பதிவு செய்து வீட்டு வேலையாட்களை வரவழைத்துள்ளனர். ஆனால் இந்நிறுவனத்தின் சேவை குறித்து சமூகவலைத்தளங்களில் பெரிய அளவில் விவாதம் நடந்துள்ளது. இருப்பினும் இந்நிறுவனம் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து தங்கள் சேவையில் எந்த மாற்றமும் செய்யாமல் நடத்தி வருகின்றனர்.

மேலாடை குறைவாக வீட்டு வேலைசெய்யும் பெண்களுக்கு இந்திய மதிப்பில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.6,700 மற்றும் நிர்வாணமாக வேலை செய்பவர் களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.8,500 எனக் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. இந்நிறுவனம் பிரபலம் ஆகியிருந்தாலும், இந்நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு பணியிடத்தில் உள்ள பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com