

சென்னை,
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. வெறும் 20 ஓவர்களுக்குள் எதிரணி பந்துவீச்சை தாக்கி, ரன்களை குவிக்க வேண்டிய சவாலான இந்தப் போட்டிகளில், மிகப்பெரிய தனிநபர் ஸ்கோர் என்றாலே கிறிஸ் கெயிலின் பெயர்தான் நினைவுக்கு வரும்.
அந்த வகையில், டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை பதிவு செய்தர்வகளில் முதல் 10 இடங்களில் உள்ள வீரர்களை தற்போது காண்போம்.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக தனிநபர் ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் லுஹான்-ட்ரே பிரிட்டோரியஸ் முதலிடத்தில் உள்ளார்
கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற சிஎஸ்ஏ புரோ 20 கோப்பைத் தொடரில், டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய லுஹான்-ட்ரே பிரிட்டோரியஸ், நைட்ஸ் அணிக்கு எதிராக 79 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 188 ரன்கள் குவித்தார்.
இந்தப் பட்டியலில் பிரியன்ஷ் ஆர்யா 181 ரன்களுடன் 2-வது இடத்திலும், கிறிஸ் கெயில் 175 ரன்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். ஆரோன் பிஞ்ச் 172 ரன்களுடன் 4-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
தொடர்ந்து, ஹம்சா கான் 164 ரன்களுடன் 5-வது இடத்திலும், கரன்பீர் சிங் அதே 164 ரன்களுடன் 6-வது இடத்திலும் உள்ளனர். ஹாமில்டன் மசகட்சா, ஹஸ்ரத்துல்லா சசாய், சாஹிப்சாதா பர்ஹான் ஆகியோர் தலா 162 ரன்கள் எடுத்து முறையே 7, 8, 9-வது இடங்களில் உள்ளனர். டெவால்ட் பிரெவிஸ் 162 ரன்களுடன் 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இதுவரை டி20 கிரிக்கெட்டில் எந்த வீரரும் 200 ரன்களை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.