2036-ம் ஆண்டு வரை ரஷிய அதிபராக புதின் நீடிப்பாரா?

2012-ம் ஆண்டு மீண்டும் அதிபரான புதின், 2018-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.
 ரஷிய அதிபராக புதின் நீடிப்பாரா?
Published on: 

ரஷியாவில் ஒருவர் தொடர்ந்து இரண்டு முறை மட்டுமே அதிபராக பதவி வகிக்க முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது. ஆனால் 2020-ம் ஆண்டு அரசியலமைப்பில் செய்யப்பட்ட மாற் றம், விளாடிமிர் புதினுக்கு மேலும் இரண்டு முறை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை ஏற்ப டுத்தியது. 2000-ம் ஆண்டு ரஷிய அதிபராக புதின் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004-ம் ஆண்டி லும் வெற்றி பெற்று இரண்டு பதவிக்காலங்களை நிறைவு செய்தார். அதன்பிறகு 2008-ம் ஆண்டு டிமிட்ரி மெத்வதேவ் அதிபரானார். அப்போது புதின் பிரதமராக பொறுப்பேற்றார்.

2012-ம் ஆண்டு மீண்டும் அதிபரான புதின், 2018-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார். இதற்கிடையில் அதிபரின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகளில் இருந்து ஆறு ஆண் டுகளாக மாற்றப்பட்டது. அத்துடன் 2020-ம் ஆண்டு ரஷிய அரசியலமைப்பில் செய்யப்பட்ட திருத்தத்தின்படி, புதினின் முந்தைய பதவிக்காலங்கள் புதிய வரம்புக்கான கணக்கில் சேர்க் கப்படாது. இதனால் 2024 மற்றும் 2030-ம் ஆண்டுகளில் நடைபெறும் தேர்தல்களில் போட்டியி டும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற புதின், 2030-ம் ஆண்டு வரை பதவியில் தொடர்வார். அதைத்தொடர்ந்து 2030-ம் ஆண்டு நடைபெறும் தேர்த லில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே அவர் 2036-ம் ஆண்டு வரை அதிபராக நீடிக்கும் வாய்ப்பு சாத்தியமாகும்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com