உலகின் டாப் 8 வீராங்கனைகள் நேருக்கு நேர்... டென்னிஸ் இறுதித் தொடரில் அனல் பறக்கப்போகும் மோதல்

2026-ம் ஆண்டுக்கான பெண்கள் டென்னிஸ் இறுதித் தொடர் 8-ம் தேதி தொடங்குகிறது.
பெண்கள் டென்னிஸ் இறுதித் தொட
Published on: 

இந்தியன் வெல்ஸ்,

பெண்கள் டென்னிஸ் இறுதித் தொடரில் நட்சத்திர வீராங்கனைகளின் மோதும்நிலையில், பட்டத்தை வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

சாம்பியன்

2026-ம் ஆண்டுக்கான பெண்கள் டென்னிஸ் பருவகால இறுதித் தொடர் நவம்பர் 8-ம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் கார்டனில் தொடங்குகிறது. இதில் உலகின் முன்னணி 8 ஒற்றையர் வீராங்கனைகளும், 8 இரட்டையர் ஜோடிகளும் பங்கேற்க உள்ளனர்.

கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற எலினா ரைபகினா, இந்த முறையும் கோப்பையை தக்கவைக்கக் களமிறங்குகிறார். உலகின் 2-ம் நிலை வீராங்கனையான அரீனா சபலென்கா, இளம் நட்சத்திரம் மிரா ஆண்ட்ரீவா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகளும் பட்டத்துக்காக போட்டியிட உள்ளனர்.

ஒரே குழுவில் ரைபகினா, கோகோ காப்

ஒற்றையர் பிரிவில் வீராங்கனைகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.

முதல் குழு

எலினா ரைபகினா

கோகோ காஃப்

ஜெசிகா பெகுலா

லிண்டா நோஸ்கோவா

இரண்டாவது குழு

அரீனா சபலென்கா

மிரா ஆண்ட்ரீவா

எலினா ஸ்விடோலினா

கரோலினா முச்சோவா

முதல் குழுவில் நடப்பு சாம்பியன் ரைபகினாவும், 2024-ம் ஆண்டு சாம்பியன் கோகோ காப்பும் இடம்பெற்றுள்ளனர். இரண்டாவது குழுவில் சபலென்கா, இளம் வீராங்கனை ஆண்ட்ரீவா ஆகியோர் உள்ளனர்.

சபலென்காவுக்கு கடும் சவால்

உலகின் 2-ம் நிலை வீராங்கனையான சபலென்கா, கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் ரைபகினாவிடம் தோல்வியடைந்தார். இந்த முறை மீண்டும் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறார்.

முதல் குழுவில் ரைபகினா, கோகோ காப் ஆகியோருக்கு இடையிலான போட்டியும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இருவரும் முன்னாள் சாம்பியன்கள் என்பதால், குழுவில் முதலிடத்தைப் பிடிப்பதற்கான போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதன்முறையாக

இந்தத் தொடரில் மிரா ஆண்ட்ரீவா, லிண்டா நோஸ்கோவா, கரோலினா முச்சோவா ஆகியோர் முதல்முறையாக பங்கேற்க உள்ளனர்.

19 வயதான ஆண்ட்ரீவா இந்த ஆண்டின் பிரெஞ்சு ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர். விம்பிள்டன் சாம்பியனான நோஸ்கோவாவும் முதல்முறையாக இந்த தொடரில் விளையாட உள்ளார். அனுபவம் வாய்ந்த வீராங்கனைகளுக்கு இளம் வீராங்கனைகள் சவால் அளிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அரையிறுதிக்கு முன்னேறுவது எப்படி?

முதலில் ஒவ்வொரு குழுவிலும் உள்ள வீராங்கனைகள் தங்கள் குழுவில் இருக்கும் மற்ற மூவருடன் தலா ஒரு முறை மோதுவார்கள். இந்தச் சுற்றின் முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வீராங்கனைகள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள்.

அரையிறுதியில் வெற்றி பெறும் வீராங்கனைகள் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்துக்காக மோதுவார்கள். நவம்பர் 8-ம் தேதி தொடங்கும் இந்தத் தொடர் நவம்பர் 15-ம் தேதி நிறைவடைகிறது.

கடந்த ஆண்டு பட்டம் வென்ற ரைபகினா மீண்டும் கோப்பையைத் தக்கவைக்கிறாரா அல்லது சபலென்கா, கோகோ காப் உள்ளிட்ட வீராங்கனைகள் சாம்பியனாக உருவெடுக்கிறார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

X