பிரான்சில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து: 2 பேர் பலி

பிரான்சில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
Published on

டிரோம்,

பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டிரோம் நகரில் இருந்து ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் திடிரென தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதையடுத்து விமானம் எவ்வாறு விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com