இந்த ஆண்டில் இதுவரை 2,919 பேருக்கு டெங்கு பாதிப்பு - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

இந்த ஆண்டில் இதுவரை 2,919 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
Published on

சென்னை,

இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தீவிர கவனிப்பு தேவைப்படும் நிலையில் டெங்கு பாதிப்பு உள்ளது. தமிழகம் முழுவதும் இந்த ஆண்டில் இதுவரை 2,919 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைவதற்கான அறிகுறி காணப்படுகிறது. கடந்த 2 மாத தரவுகளின் படி 90% இறப்புகள், கொரோனா தடுப்பூசி செலுத்தாததால் நிகழ்ந்துள்ளன.

தமிழகத்தில் 24,760 இடங்களில் நான்காவது கட்ட மெகா தடுப்பூசி முகாம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 33.5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

தமிழகத்தில் முதியோர்களில் 42% பேர் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி போட்டுகொண்டுள்ளார்கள். எனவே, தடுப்பூசி போடத் தகுதியான முதியோர்கள் மெகா தடுப்பூசி முகாமைப் பயன்படுத்தி இன்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com