மலேரியாவுக்கு ஏற்ற ‘சூப்’

உலக அளவில் மலேரியா நோய்க்கு ஆண்டு தோறும் 4 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். 20 கோடி பேர் மலேரியா நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
Published on

காய்ச்சல், சளி, வாந்தி, தலைவலி, தசை வலி, சோர்வு போன்றவை மலேரியா நோய்க்கான ஆரம்பக்கட்ட அறிகுறி களாக இருக்கின்றன. மலேரியா பாதிப்புக்குள்ளாகிறவர்கள் சூப் அருந்துவது நோய் பாதிப்பில் இருந்து மீண்டுவர வழிவகுக்கும் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வீட்டில் தயாரிக்கப்படும் சூப், மலேரியா நோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதாகவும் ஆய்வாளர்கள் குறிப் பிடுகிறார்கள். இந்த ஆய்வை லண்டன் இம்பிரியல் கல்லூரி ஆராய்ச்சி குழுவினர் மேற்கொண்டுள்ளனர். இதற்காக உலகத்தின் பல பகுதிகளில் தயாரிக்கப்படும் சூப் வகைகளை ஆய்வுக்கு உட் படுத்தி இருக்கிறார்கள். அவை மலேரியா ஒட்டுண்ணிகளுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர் களுக்கு ஐந்து விதமான சூப் வகைகளை பருகக் கொடுத்து பரிசோதித்தபோது மலேரியா நோயை உருவாக்கும் ஒட்டுண்ணியின் வளர்ச்சியை அவை 50 சதவீதத்திற்கும் அதிகமாக கட்டுப்படுத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவற்றுள் இரு சூப் வகைகள் மலேரியா நோய் எதிர்ப்பு மருந்தான டீஹைட்ரோ ஆர்டிமிசினேனின் தாக்கத்தை கொண்டிருப்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மலேரியா நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும். இளநீர் மற்றும் பழ ஜூஸ்களையும் பருகலாம். பழங்களையும் அதிகமாக சாப்பிட வேண்டும். பப்பாளி, கேரட், பீட்ரூட், ஆரஞ்சு உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களை சாப்பிடலாம். புரதம் அதிகம் கொண்ட உணவு வகை களையும் சாப்பிட வேண்டும். அதேவேளையில் எண்ணெய் பலகாரங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com