தெற்காசிய கால்பந்து போட்டி: இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்

தெற்காசிய கால்பந்து போட்டியில் இந்தியா-வங்காளதேசம் இன்று மோதுகிறது.
Published on

மாலே,

13-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மாலத்தீவில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் முன்னாள் சாம்பியன் இந்தியா, நடப்பு சாம்பியன் மாலத்தீவு, வங்காளதேசம், நேபாளம், இலங்கை ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 7 முறை சாம்பியனான இந்தியாவுக்கே இந்த தடவை மகுடம் சூடுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தனது முதலாவது லீக்கில் வங்காளதேசத்தை இன்று சந்திக்கிறது.

இதையொட்டி இந்திய கேப்டன் சுனில் சேத்ரி கூறுகையில், வங்காளதேசம் மிகவும் சவாலான அணி. கடந்த சில மாதங்களில் அவர்களுடன் இரண்டு ஆட்டங்களில் மோதியுள்ளோம். அவை மிகவும் கடினமாக இருந்தது. மற்றவர்களை காட்டிலும் நாங்கள் சற்று மேன்மையான அணியாக தெரிந்தாலும் இந்த தொடரை பொறுத்தவரை ஒவ்வொரு ஆட்டமும் யுத்தம் மாதிரியே இருக்கும். நாம் கடைசி நிமிடம் வரை போராடியாக வேண்டும் என்றார். வங்காளதேசம் தனது தொடக்க ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் இலங்கையை வீழ்த்தி இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com