இலங்கை - ஆஸ்திரேலியா டெஸ்ட்: பவுன்சர் பந்து தாக்கியதில் நிலைகுலைந்த கருணரத்னே

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பட் கம்மின்ஸ் வீசிய பந்தில் இலங்கை வீரர் கருணரத்னே நிலைகுலைந்து சுருண்டு விழுந்தார்.
இலங்கை - ஆஸ்திரேலியா டெஸ்ட்: பவுன்சர் பந்து தாக்கியதில் நிலைகுலைந்த கருணரத்னே
Published on

கான்பெர்ரா,

ஆஸ்திரேலியா- இலங்கை இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெர்ரா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 2-வது நாளான இன்று இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் பேட் செய்து கொண்டிருந்தது.

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ் வீசிய ஒரு பவுன்சர், இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர் திமுத் கருணரத்னே ஹெல்மெட்டை பதம் பார்த்தது. இதில், நிலைகுலைந்த கருணரத்னே உடனடியாக மைதானதில் விழுந்தார்.

இதையடுத்து, ஸ்டெச்சரில் களத்திற்கு வெளியே கருணரத்னே கொண்டு செல்லப்பட்டார். பின்னர் ஆம்புலன்ஸில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் காட்சிகளும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com