கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த மேலும் ஒருவர் சாவு - பலி எண்ணிக்கை 67 ஆக உயா்வு


கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த மேலும் ஒருவர் சாவு - பலி எண்ணிக்கை 67 ஆக உயா்வு
x
தினத்தந்தி 16 July 2024 1:22 AM IST (Updated: 16 July 2024 1:51 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் 19-ந் தேதி விஷ சாராயம் குடித்து 229 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்கள் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனைக்கும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதில் சிகிச்சை பலனின்றி 6 பெண்கள் உள்பட 66 பேர் பரிதாபமாக உயிாிழந்தனா். 161 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருந்த நிலையில் 2 பேர் மட்டும் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனா்.

இந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாபுரம் திருவரங்கம் நகரை சோ்ந்த கண்ணன் (வயது 72) என்பவர் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பாிதாபமாக உயிாிழந்தாா். இதன் மூலம் இச்சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 67 ஆக உயா்ந்தது. தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவா் மட்டும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

1 More update

Next Story