ரோஹிங்யா அகதிகளின் பயோமெட்ரிக் தகவல்கள் விரைவில் மியான்மாருக்கு அனுப்பப்படும் - ராஜ்நாத் சிங்

ரோஹிங்யா அகதிகளின் பயோமெட்ரிக் தகவல்கள் விரைவில் மியான்மாருக்கு அனுப்பப்படும் என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
Published on

இந்தியாவில் உள்ள 14 ஆயிரம் ரோஹிங்யாக்கள் மட்டுமே ஐ.நா. விதிமுறைகளின்படி பதிவு செய்யப்பட்டவர்கள். 40 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இவர்களை வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரோஹிங்யா இஸ்லாமியர்களின் பயோமெட்ரிக் தகவல்களை சேகரிக்க மாநில அரசுகளிடம் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. பயொமெட்ரிக் தகவல்கள் சேகரிக்கப்பட்டதும், அவை மியான்மர் அரசுக்கு அனுப்பப்படும் என்றார்.

கிழக்கு பிராந்திய கவுன்சில் கூட்டத்தில் கலந்துக்கொண்ட ராஜ்நாத் சிங், பீகார், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா மாநிலங்களை சேர்ந்த முதல்-மந்திரிகளுடன் பிராந்திய பாதுகாப்பு, மாவோயிஸ்ட் விவகாரம் தொடர்பாக ஆலோசனையை மேற்கொண்டார்.

ரோஹிங்யா, சட்டவிரோத குடியேறிகளின் பயோமெட்ரிக் தகவல்களை சேகரிக்க உள்ளூர் போலீஸ்களுக்கு உத்தரவிட மாநில அரசுகளிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுகொண்டுள்ளது.

இந்தியாவில் உள்ள ரோஹிங்யாக்கள் அனைவரும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், அவர்களை வெளியேற்ற அவர்களுடைய நகர்வை கண்காணிக்கவும், தனிப்பட்ட தகவல்களை பெறவும் மாநில அரசுக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளோம் எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com