ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி

ரெயிலில் அடிபட்டு முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Published on

ஜோலார்பேட்டை,

குடியாத்தத்தை அடுத்த கே.வி.குப்பம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 65). இவர், குடியாத்தத்தை அடுத்த காவனூர் ரெயில்வே நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரெயில் மோதியதில் மாசிலாமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரெயிலில் அடிபட்டு இறந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com