உத்தர பிரதேசத்தில் 12ம் வகுப்பு மாணவிகளிடம் வாலிபர்கள் ஈவ் டீசிங்; தட்டி கேட்ட 2 பேருக்கு அடி, உதை

உத்தர பிரதேசத்தில் பள்ளி கூடம் முடிந்து வீடு திரும்பிய 12ம் வகுப்பு மாணவிகளை 2 வாலிபர்கள் ஈவ் டீசிங் செய்ததுடன் தடுத்தவர்களையும் தாக்கி உள்ளனர்.
Published on

முசாபர்நகர்,

உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் கொத்வாலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகீர்ஷா சவுக் பகுதியருகே பள்ளி கூடம் முடிந்து 12ம் வகுப்பு மாணவி ஒருவர் தனது இரு தோழிகளுடன் வீடு திரும்பி கொண்டிருந்து உள்ளார்.

அந்த வழியே பைக் ஒன்றில் திடீரென வந்த 2 வாலிபர்கள் அவர்களை ஈவ் டீசிங் செய்துள்ளனர். இதனை அருகே இருந்த 2 பேர் தட்டி கேட்டுள்ளனர். அந்த வாலிபர்களை தடுக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்களை வாலிபர்கள் அடித்து விரட்டியுள்ளனர்.

அதன்பின் மாணவியையும் வாலிபர்கள் அடித்து உள்ளனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com