காங்கேயம் அருகே தொட்டிக்கரி ஆலையை ஆய்வு செய்த சப்-கலெக்டர்

காங்கேயம் அருகே தொட்டிக்கரி ஆலையை தாராபுரம் சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.
Published on

காங்கேயம்,

காங்கேயம் அருகே உள்ள பொத்தியபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அவினாசிபாளையம்புதூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேங்காய் தொட்டிக்கரி மூலம் கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் தேங்காய் தொட்டிகள் சுடும்போது புகை வெளியேறுகிறது. இந்த புகையால் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடிநீர் மாசுபடுவதுடன், அதன் துகள்கள் படிந்து தென்னை மரங்களும், விவசாய கிணறுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் கால்நடைகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாகவும் விவசாயிகள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.

இதை தொடர்ந்து தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார் சம்பந்தப்பட்ட ஆலைக்கு சென்று ஆய்வு செய்தார். அந்த பகுதியில் உள்ள தென்னை மரங்களை பார்வையிட்டார். மேலும் விவசாய நிலங்களில் குடிநீர் மாசுபட்டுள்ளதா? எனவும், ஆலையில் இருந்து புகை எவ்வாறு வெளியற்றப்படுகிறது.

இதனால் எந்த வகையில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்பது குறித்தும் பரிசோதனை செய்யும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த பரிசோதனையை 10 நாட்களில் முடிக்கும்படி கேட்டு கொண்டார். இந்த பரிசோதனையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது சப்-கலெக்டருடன், காங்கேயம் தாசில்தார் புனிதவதி, மாசுக்கட்டுப்பாட்டு அலுவலர் செந்தில்விநாயகம், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரமேஷ் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் புனிதா ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com