எல்லையில் இந்தியா - சீனா மோதல் நிலவரம் எதிர்க்கட்சிகளிடம் மத்திய அரசு ஆலோசிக்கிறது

எல்லையில் இந்தியா - சீனா ராணுவம் இடையே மோதலான போக்கு நிலவிவரும் நிலையில் எதிர்க்கட்சிகளிடம் மத்திய அரசு ஆலோசனை செய்கிறது.
Published on

புதுடெல்லி,

சிக்கிம் செக்டார் டோக்லாமில் இந்தியா மற்றும் சீன ராணுவம் இடையே மோதலான போக்கு 4 வார காலமாக நீடிக்கிறது. இவ்விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளை நாட உள்ள மத்திய அரசு எதிர்க்கட்சிகளிடம் இப்போதைய நிலவரம் தொடர்பாக ஆலோசிக்கிறது.

இன்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வீட்டில் நடைபெறும் அனைத்து கட்சிகள் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளிடம் நிலவரம் தொடர்பாக ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உள்பட முக்கிய எதிர்க்கட்சிகளின் பாராளுமன்ற தலைவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது. முன்னதாக மத்திய அரசு முக்கியமான கொள்கை விவகாரங்களை மறைக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை நகர்வானது எதிர்க்கட்சிகளிடம் தெரிவிக்கப்படாமல் எடுக்கப்பட்டது. ஆனால் வெளிநாட்டு கொள்கை தொடர்பாக மத்திய அரசு எதிர்க்கட்சிகளுடன் ஆலோசிப்பது மற்றும் தகவல் தெரிவிப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாகும். எடுத்துக்காட்டாக பாகிஸ்தான் தொடர்பான கொள்கையில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களை கொண்டு உள்ளது. முதலில் பாகிஸ்தானை ஓரங்கட்டியது, பின்னர் பிரதமர் மோடி மற்றும் சுஷ்மா சுவராஜ் அங்கு சென்றார்கள். பதன்கோட் விமானப்படை தளம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மீண்டும் பாகிஸ்தானை இந்தியா ஒதுக்கிவிட்டது.

இதே சீன விவகாரத்தில் பார்க்கும் போதும் முற்றிலும் பார்க்கப்பட்டது. பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் போது எதிர்க்கட்சிகளால் சீன விவகாரங்கள் எழுப்பப்படக்கூடாது என்பதை மத்திய அரசு விரும்புகிறது, எனவே இந்நகர்வை முன்னெடுத்து உள்ளது என கூறப்படுகிறது. சிக்கிம் செக்டாரில் கடந்த 4 வாரங்களாக இந்தியா மற்றும் சீன ராணுவம் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் மத்திய வெளியுறவுத்துறை ஒருரே ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டு உள்ளது. ஆனால் சீனா தொடர்ந்து ஆத்திரமூட்டும் வகையில் அறிக்கையினை வெளியிட்டது.

டோக்லாமில் இருந்து இந்திய ராணுவத்தை திரும்ப அழைக்க முடியாது, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்க்க தயார் என இந்தியா ஏற்கனவே தெரிவித்து உள்ளது. இந்தியா ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என சீனா கூறிஉள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com