‘காங்கிரஸ் கட்சியில் திறமைக்கு மதிப்பில்லை’ - ஜோதிராதித்ய சிந்தியா தாக்கு

சச்சின் பைலட் ஓரங்கட்டப்பட்டுள்ளார் என்றும், காங்கிரஸ் கட்சியில் திறமைக்கு மதிப்பில்லை என்றும் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
Published on

புதுடெல்லி,

ராஜஸ்தான் காங்கிரஸ் அரசில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்-மந்திரி சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மாநில அரசுக்கு சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

இந்த நிலையில் சச்சின் பைலட் கட்சியில் ஓரங்கட்டப்பட்டு உள்ளதாக, காங்கிரசின் முன்னணி தலைவராக இருந்தவரும், சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்தவருமான ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ராஜஸ்தான் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட், முதல்-மந்திரி அசோக் கெலாட்டால் ஓரங்கட்டப்பட்டு, துன்புறுத்தப்பட்டு உள்ளார். என்னைப்போல எனது சகாவும் துன்பப்படுவதை பார்க்க வருத்தமாக உள்ளது. காங்கிரசில் திறமைக்கு மதிப்பில்லை என்பதையே இது காட்டுகிறது என்று குறிப்பிட்டு உள்ளார்.

மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரி கமல்நாத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு காங்கிரசை விட்டு விலகிய ஜோதிராதித்ய சிந்தியா, பா.ஜனதாவில் அடைக்கலமானார். அவருடன் 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் கட்சி தாவியதால், கமல்நாத் அரசு கவிழ்ந்து, பா.ஜனதா அரசு ஆட்சியமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com