உலக ஆணழகன் போட்டியில் தங்கம் வென்றார் தமிழக வீரர்

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் பதக்கம் வென்றனர்.
Published on

தாஷ்கண்ட்

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் பதக்கம் வென்றனர். 47 நாடுகளில் உள்ள வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர்.

இதில் ஜூனியர் பிரிவில் சுரேஷ் ஆணழகன் பட்டத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். இதே பிரிவில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த இன்னொரு வீரரான விக்னேஷ் என்பவர் வெண்கலப் பதக்கம் வென்றார். சீனியர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த பெஞ்சமின் என்பவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com