நாட்டிலேயே 2வது இடம் பெற்று இருப்பது மாபெரும் சாதனை: ராஜேஸ்வரிக்கு தவெக வாழ்த்து

யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது
நாட்டிலேயே 2வது இடம் பெற்று இருப்பது மாபெரும் சாதனை: ராஜேஸ்வரிக்கு தவெக வாழ்த்து
Published on

சென்னை,

தவெக கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,


நாடு முழுவதும் 2025-ம் ஆண்டுக்கான ஐஏஎஸ் , ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த சகோதரி ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

TNPSC குரூப் Iல் வென்று திண்டுக்கல் மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணிபுரிந்து கொண்டே UPSC எழுதி அதில் நாட்டிலேயே இரண்டாம் இடம் பெற்று இருப்பது மாபெரும் சாதனை. இவரைப் போலவே ஏ.ஆர். ராஜா மொகைதீன் 7-ஆம் இடம் பிடித்து தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.. இந்த ஆண்டு இந்திய அளவில் தேர்ச்சி பெற்றுள்ள 958 பேரில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 60 பேர் என்பதை அறிந்து மகிழ்கிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com