மதுரை: கட்டுமான நிறுவனத்தில் 4 நாட்கள் நடந்த சோதனை நிறைவு - ரூ.165 கோடி பறிமுதல்...!

மதுரையில் கட்டுமான நிறுவனத்தில் 4 நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவடைந்துள்ளது.
மதுரை: கட்டுமான நிறுவனத்தில் 4 நாட்கள் நடந்த சோதனை நிறைவு - ரூ.165 கோடி பறிமுதல்...!
Published on

மதுரை,

மதுரையை தலைமையிடமாக கொண்டு ஜெயபாரத், அன்னை பாரத் மற்றும் கிளாட்வே சிட்டி ஆகிய தனியார் கட்டுமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனங்களில் வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக சென்னையில் உள்ள வருமானவரி புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து, கடந்த 4 நாட்களாக அந்த நிறுவனம் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடந்த்தி வந்தனர்.

இந்த நிலையில் மதுரையில் கட்டுமான நிறுவனத்தில் 4 நாட்களாக நடைபெற்ற வருமானவரித்துறையின் சோதனை நிறைவடைந்து உள்ளது. இந்த சோதனையில் ரூ.165 கோடி பணம், 200 கோடி மதிப்பிலான ஆவணங்கள், 14 கிலோ தங்கம் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com